Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விஜய், அஜித்தை தொடும் சசிகுமார்!!

•On May 23, 2013
Kutti-Puli-Movie-Poster
Share
ஒவ்வொரு கோடையிலும் பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாவது வழக்கம். இந்த கோடையில் அப்படி படங்கள் ஏதும் வெளியாகவில்லை. தற்போது சசிகுமாரின் குட்டிப் புலி அந்த பெரிய பட அந்தஸ்தைப் பெற்றுள்ளது. அதற்கு முக்கிய காரணம் சன் பிக்சர்ஸ் - ரெட் ஜெயன்ட் கூட்டணி. சசிகுமார் - லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த குட்டிப் புலி வரும் மே 30-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் - ரெட் ஜெயன்ட் இணைந்து வெளியிடும் குட்டிப் புலி பெரிய விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ரஜினி, விஜய், அஜீத் படங்களுக்கு மட்டுமே கிடைக்கும் மினிமம் கியாரண்டி விலை முறையில் பல இடங்களில் இந்தப் படம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 400 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. NSC ஏரியாவில் மட்டுமே 90 அரங்குகளில் இந்தப் படத்தை வெளியிடுகிறது AGS மூவீஸ். இது விஜய், அஜித் படங்களுக்கே கிடைக்காத எண்ணிக்கை.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.