Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

புற்றுநோயாளிகளுக்காக 800 பேர் முடிதானம் – சௌந்தர்யா ரஜினிகாந்த் தொடங்கி வைத்தார்!

•On November 2, 2026
Featured image placeholder
Share

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உதவும் நோக்கில், 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் பிரம்மாண்டமான சாதனை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்பு, ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியை இயக்குநரும் திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சௌந்தர்யா ரஜினிகாந்த், முடிதானத்தின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது பாட்டியும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அப்போது அவருக்கு ஏற்பட்ட முடி உதிர்வை நேரில் பார்த்து உணர்ந்ததாகவும் தெரிவித்தார். புற்றுநோய் சிகிச்சையின்போது முடி இழப்பைச் சந்திக்கும் நோயாளிகள் எதிர்கொள்ளும் மனரீதியான சிரமங்களைத் தன்னால் புரிந்துகொள்ள முடிவதாகக் குறிப்பிட்டார். இத்தகைய சூழலில், அவர்களுக்கு உதவும் வகையில் முடிதானம் செய்வது மிகவும் பாராட்டத்தக்க சமூக நலச் செயலாகும் என்றும் தெரிவித்தார்.

மேலும், சமூக வலைதளங்களைப் பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி, நல்ல நோக்கங்களுக்காகவும் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதுபோன்ற மனிதநேயமும் சமூக அக்கறையும் கொண்ட நிகழ்வுகள் குறித்த தகவல்களை அதிக அளவில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதுபோன்ற நல்ல முயற்சிகளுக்கு தன்னால் இயன்ற ஆதரவைத் தொடர்ந்து வழங்குவேன் என்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்தார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.