சென்னையில் ‘தி புட்டு’ உணவக கிளையை தொடங்கிய திலீப் – காவ்யா மாதவன் தம்பதி

சென்னை அண்ணா நகரில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் திலீப் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவன் ஆகியோருக்கு சொந்தமான ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தின் புதிய கிளை தொடங்கப்பட்டுள்ளது.
கேரளாவின் பாரம்பரிய உணவுகளையும், மண்ணின் கலாச்சாரத்துடன் இணைந்த சுவைகளையும் வழங்கி வரும் ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்திற்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளன. குறிப்பாக துபாய், சார்ஜா, ஜெட்டா, தோஹா உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் இந்நிறுவனத்தின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.
சென்னையில் வசிக்கும் மலையாளிகளுக்கும், கேரள பாரம்பரிய உணவுகளை விரும்பும் உணவு பிரியர்களுக்கும் கேரளாவின் பாரம்பரிய சுவையை வழங்கும் நோக்கில் அண்ணா நகரில் இந்த புதிய கிளை தொடங்கப்பட்டுள்ளது.
புதிய கிளையின் திறப்பு விழா சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உணவகத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் நடிகர்கள் அசோகன், ஷாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் அசோகன், ரியாஸ் கான், நடிகைகள் மீனா, ஷாரதா, ஷீலா, சீமா, ராதிகா சரத்குமார், மிர்னா, பூர்ணிமா பாக்யராஜ், கிகி விஜய் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். இயக்குநர் பிரியதர்ஷன், சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்டின், தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவி, சிவா, விஜயகுமார், ரவி கொட்டாரக்கரா, Seven Arts விஜயகுமார், Prince Pictures வெங்கடேஷ், ஏ.வி. அனூப், மினி ஸ்டூடியோ வினோத் குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பாடகர்கள் ராகேஷ் பிரம்மானந்தன், சுஜாதா மோகன், நடன இயக்குநர்கள் கலா மாஸ்டர், சாண்டி மாஸ்டர், ஸ்டண்ட் இயக்குநர்கள் கனல் கண்ணன், மாஃபியா சசி, ஒளிப்பதிவாளர் அபினந்தன் ராமானுஞ்சன் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
‘தி புட்டு’ உணவகத்தின் முக்கிய அடையாளமாக 80 வகையான புட்டுகள் இடம்பெற்றுள்ளன. இதனுடன் கேரளாவின் பல்வேறு பாரம்பரிய உணவு வகைகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.
அண்ணா நகரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கிளையின் உட்புற வடிவமைப்பும் கேரளாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 80 வகையான புட்டுகள் மற்றும் பாரம்பரிய கேரள உணவு வகைகள் இடம்பெற்றுள்ளதால், கேரள உணவு விரும்பிகளிடையே இந்த புதிய கிளை கவனம் பெற்றுள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
