Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சூப்பர் ஸ்டார் இல்லை, சூப்பர் ஸ்டாரின் மருமகன்!!

•On May 23, 2013
u8_Dhanush
Share
சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தை இயக்க போகிறார், EROS நிறுவனம் தயாரிக்கிறது, அதற்காக முன்பணம் கூட தரப்பட்டது என தினம் தினம் செய்திகள் வந்து கொண்டிருந்தது இயக்குனர் கே.வி.ஆனந்தை பற்றி. அவரும் அதற்கு எந்த பதிலையும் தராமல் மௌனம் சாதித்து வந்தார். தான் மூன்று கதைகளை விவாதித்து வருவதாகவும், அதில் ஏதேனும் ஒன்றை இயக்க போவதாகவும் கூறி வந்தார். இந்நிலையில் கே.வி.ஆனந்தின் அடுத்த படத்தில் தான் நடிக்க இருப்பதாக தனுஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் தனுஷ்" கே.வி.ஆனந்த் சாரின் படத்தில் நான் நடிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தின் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இன்னும் முடிவாகவில்லை.ஆகஸ்டில் படப்பிடிப்பு தொடங்குகிறது" என்றார். எனவே சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தை இயக்கபோவது கே.வி.ஆனந்த் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.