ரஜினி, அஜித் வழியில் தற்போது சிம்பு!!

சிம்பு என்று சொன்னாலே பெண்கள், ப்ளேபாய் போன்ற வார்த்தைகள் முதலில் வந்து நிற்கும். ஆனால் தற்போது கடந்த சில மாதங்களாகவே சிம்பு ரஜினி, அஜித் வழியில் ஆன்மீக பாதைக்கு திரும்புவதாக செய்திகள் வந்தன.
தியானம், யோகா ஆகியவற்றில் ஈடுப்பட்டு வந்த சிம்பு அதன் தொடர்ச்சியாக இப்போது புனித ஸ்தலங்கான ரிஷிகேஷ், ஹரிதுவார் ஆகிய இமயமலைப் பிரதேசங்களுக்கு சென்று தரிசிக்க ஆரம்பித்துவிட்டாராம். சமீபத்தில் ‘இங்க என்னா சொல்லுது’ படப்பிடிப்பின்போது இந்த பகுதியில் உள்ள கோயில்களுக்கு சென்றுள்ளார்.
இதைப் பற்றி பேசும் போது, ‘ஆம், நான் இப்போது ஆன்மீகத்தில் கவனம் செலுத்துகிறேன். இந்த தியானம் மற்றும் ஆன்மிகம் எனக்கு என்னையே அடையாளம் காட்டுகிறது. என்னை மென்மேலும் செம்மைப்படுத்த இது உதவும்.
ஆன்மிகம் என்பது கோயில் குளங்களுக்கு செல்வது மட்டுமல்ல. ஞானம் தேடுதல். நான் அந்த தேடுதலில் ஈடுபட்டு வருகிறேன். இந்த தூய்மையான காற்றின் ஊடே கலந்து வரும் ஆன்மிகம் என்னை மேலும் மெருகேற்ற உதவும் என நம்புகிறேன்,” என்கிறார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postஒரு நடிகையின் டைரி - விமர்சனம்!!
Next Postவிஜய், அஜித்தை தொடும் சசிகுமார்!!
