Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

வளைகாப்பு பாடலில் நடனமாடிய நளினி!!

•On September 12, 2013
Old-Actress-Nalini-in-Saree-2
Share
Old-Actress-Nalini-in-Saree-2 சாய் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக L.லாரன்ஸ், M.தன்ராஜ், C.V.தங்கவேல் K.L.சூர்யகுமார், நிப்பான்ஸ் பிரபாகர் ஆகியோர் இணைத்து தயாரிக்கும் படத்திற்கு “ஜாக்கி” என்று பெயரிட்டுள்ளனர். “சாட்டை”படத்தின் மூலம் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய யுவன் கதாநாயகனாக நடிக்கிறார். யுவன் ஜாக்கி மூலம் இன்னொரு பரிமாணத்திற்கு செல்கிறார். கதாநாயகியாக தர்ஷிதா நடிக்கிறார். கஞ்சா கருப்பு, ரவிபிரகாஷ், நான் கடவுள் ராஜேந்திரன், வாசு விக்ரம், சேரன் ராஜ் மற்றும் பாக்யஸ்ரீ ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - ரவி, இசை - ஸ்ரீகாந்த் தேவா. எடிட்டிங் - சுரேஷ் அர்ஸ். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கோவை ரவிராஜன். படம் பற்றி இயக்குனர் கோவை ரவிராஜனிடம் கேட்டபோது, ”கிராமத்தில் செய்த சின்ன தவறுகள் ஜாக்கியை திசை திருப்பியதால் வேலை தேடி சென்னைக்கு வருகிறான் வந்த இடத்தில் பெரிய தவறுகளை செய்து சூழ்நிலை கைதியாகிறான் அதிலிருந்து அவன் விடுபட்டானா? அவனுக்கு என்ன ஆனது? என்று அதிரடி ஆக்ஷன் கதையை காதல் மோதலுடன் சொல்லி இருக்கிறோம். நடிகை நளினி இந்த படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சியில் நடித்திருக்கிறார். வளைகாப்பு விழாப்பாடலில் நளினி நடனமாடி இருக்கிறார். நீண்ட வருடங்களுக்கு பிறகு நான் நடனமாடி இருக்கிறேன் என்று பெருமையுடன் கூறினார் என்கிறார் இயக்குனர் கோவை ரவிராஜன்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.