Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

புதுமுகங்களுடன் பிரபு சாலமனின் “கயல்”!

•On September 11, 2013
DSC_0024
Share
DSC_0024 எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் P.மதன் காட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க  பிரபுசாலமன் இயக்கத்தில் “கயல்”. பல வெற்றி படங்களை தயாரித்த எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் P.மதன் மற்றும் காட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் “கயல்”. மைனா, கும்கி என மாபெரும் வெற்றி படங்களை இயக்கிய பிரபுசாலமன் இயக்கும் அடுத்த படம் இது. இந்த படத்தில் சந்திரன் என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். வின்சென்ட் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக ஆனந்தி என்ற புதுமுகம் நடிக்கிறார். இவர்களுடன் இமான் அண்ணாச்சி நடிக்கிறார். மற்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. யுகபாரதி பாடல்களுக்கு இமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு - ஆர்.கே. வர்மா. எடிட்டிங் - சாமுவேல்,  கலை – வைரபாலன். இணை தயாரிப்பு – ஜேம்ஸ். படப்பிடிப்பு செப்டம்பர் 12 ஆம் தேதி சென்னையில் தொடங்கி தொடர்ந்து நாகர்கோவில் கன்னியாகுமரி, மைசூர், சிமோகா, மேகாலயா, லே-லடாக் போன்ற இடங்களில் நடைபெற உள்ளது. மிக அதிக பொருட்செலவில் படம் உருவாக உள்ளது.  ,  ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.