Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

“மனதில் மாயம் செய்தாய்” இசை வெளியீடு!!

•On September 5, 2013
MMS
Share
MMS ஃபுல் ஹவுஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் சுரேஷ் பி.குமார் இயக்கியுள்ள ரொமான்டிக் த்ரில்லர் படம் மனதில் மாயம் செய்தாய். சுரேஷ் பி.குமார் 15 ஆண்டுகளாக இணை இயக்குனராக பணிபுரிந்தவர். இது இவரின் முதல் படம் என்பது குறிப்பிடதக்கது. இந்த படத்தில் பிரின்ஸ் என்னும் தெலுங்கு பட நாயகன் தமிழில் அறிமுகம் ஆகியிருக்கிறார். இவருடன் மைனா படத்தில் நடித்த சேது மற்றொரு நாயகனாக நடித்துள்ளார். நாயகிகளாக “தமிழ் படம்” திஷா பாண்டே”, ரிச்சா பனாய் ஆகியோர் நடித்துள்ளனர். பிரபல சாக்ஸோபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத்தின் மகன் மணிகாந்த் கத்ரி இசையமைத்துள்ளர். இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடந்தது. விழாவில் இயக்குனர் ப்ரியதர்ஷன் கலந்து கொண்டு இசைத்தட்டினை வெளியிட, இயக்குநர் பிரபு சாலமன் பெற்றுகொண்டார். ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு சிறப்பு விருந்தினரை அழைத்து அறிமுகம் செய்து வைத்தனர். முதல் பாடலை “சாட்டை” பட இயக்குனர் அன்பழகன் அறிமுகம் செய்ய, இரண்டாவது பாடலை பிரபல புகைப்பட கலைஞர் கணேஷ் வெங்கட்ராமன் அறிமுகம் செய்து வைத்தார். மூன்றாவது பாடலை நடிகர் ஜீவன் அறிமுகம் செய்து வைத்தார். கடைசியாக நான்கவது பாடலை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை பட இயக்குனர் கிருஷ்ணா அறிமுகம் செய்து வைத்தார். மேலும் அனைத்து பாடல்களையும் மேடையில் பாடகர்கள் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். ஒரு பாடலுக்கு மட்டும் “களரிபயட்டு” முறையில் சிறப்பாக நடனம் அமைத்து கேரளாவை சேர்ந்த கலைஞர்கள் மகிழ்வித்தனர். முடிவில் ஃபுல்ஹவுஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் நன்றி கூறினார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.