எனக்கு பிடித்த ஹீரோ ஆர்யா தான் – இளம் நாயகி அதிரடி!!

பிரபல விளம்பர மாடல் காவ்யா ஷெட்டி தற்போது 'ஷிவானி' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். என்னுடைய நடிப்பு எனக்கு திருப்தியாக இருந்தது. அது தவிர படப்பிடிப்பு குழுவினரும் என்னை பாராட்டுவது எனக்கு மகிழ்ச்சியே.
ஷிவானி ஒரு திகில் படம் என்றும் அதில் அவருடைய பாத்திரம் திகில் ஊட்டுவதாக இருக்கும் என கூறப்படுவதை கேட்டு சிரித்த ஷிவானி 'நான் கதையை சொல்ல மாட்டேன், ஆனால் ஒன்று சொல்லியாக வேண்டும், நான் இயல்பாகவே பயந்த பெண் தான், இரவில் தனியாக செல்ல இன்னமும் அச்சம் தான்.
அந்த பயம், பேய், பிசாசினால் அல்ல மனித உருவில் திரியும் மிருகங்களால் தான், பெண்களுக்கு எதிராக தொடரும் வன்கொடுமைகள் மனதை காயப்படுத்துகிறது. என் மனம் மும்பை பெண் புகைப்பட நிருபருக்காக அழுகிறது. என் கருத்தின்படி சினிமா உலகம், பொதுவான சமுதாய உலகை விட பாதுகாப்பானது என்று தான் கருதிகேறேன்.
பேச்சை மாற்றலாம் என்று உங்களுக்கு பிடித்த கதாநாயகன் யார் என்று கேட்டபோது கண் இமைக்காமல் 'ஆர்யா' என்று கூறுகிறார். திரை உலகில் நாயகிகள் இடையே ஆர்யாவுக்கு பெருகி வரும் ரசிகைகள் பட்டாளத்தில் மேலும் ஒரு எண்ணிக்கை 'காவ்யா ஷெட்டி'.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
