EPIC 3D - விமர்சனம்:

3D அனிமேஷனில் வெளிவந்த ஐஸ் ஏஜ், ரியோ, மடகாஸ்கர், குங் பூ பாண்டா என அனைத்து படங்களுமே வெற்றிதான். ஐஸ் ஏஜ், ரியோ போன்ற அனிமேஷன் படங்களை உருவாக்கியவர்களின் அடுத்த படைப்பு. 2002-ல் ICE AGE, 2005- ல் ROBOTS போன்ற அனிமேஷன் படங்களை இயக்கிய Chris Wedge இந்த படத்தை இயக்கியுள்ளார்.
பிரபல நாவலாசிரியரான “William joyce” எழுதிய “The leaf men and the Brave good bugs” என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட நகைச்சுவை மிகுந்த அனிமேஷன் படம் தான் இந்த EPIC 3D. தாய் இறந்த பின் தந்தையோடு சேர்ந்து வாழ தந்தையை தேடி வருகிறார் மகள், மகளின் வருகையை கூட பெரிதாக நினைக்காமல் ஆராய்ச்சிக்காக தந்தை அலைகிறார். மனமுடைந்த மகள் வீட்டை விட்டு கிளம்ப நினைக்கும்போது எதிர்பாராத விதமாக ஒரு இலையை தொட உருவம் சிறியதாக மாறுகிறாள். பின் இலை மனிதர்களுடன் சேர்ந்து அவர்களுக்கும் உதவுகிறாள்.
உலகை பசுமையாக வைத்திருக்க நினைக்கும் சிறிய இலை மனிதர்களுக்கும், அதனை அழிக்க நினைப்பவர்களுக்கும் இடையே ஏற்படும் போர், அதில் யார் வெற்றி பெற்றார்கள், எப்படி ஜெயித்தார்கள், நாயகி மறுபடி பழைய உருவத்தை அடைந்தாளா? போன்றவற்றை 3D-யில் தத்ருபமாக காட்டியுள்ளனர்.
Collin farrel, Josh Hutcherson, Amada,Aziz, Pitbull, Christoph Walts போன்ற பிரபலங்கள் குரல் கொடுத்துள்ள இந்தப் படத்திற்கு Danny Elfman-ன் இசையும், Renota Falcoa-ன் ஒளிப்பதிவும் பெரிய பலம். சிறிய மனிதர்களின் சண்டைக்காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன. ஒரு நல்ல மெசேஜ் உடன் படத்தை முடிக்கிறார் இயக்குனர். 3D காட்சிகள் கண்களுக்கு விருந்து.
குழந்தைகளை குறி வைத்து எடுக்கப்படும் அனிமேஷன் படங்கள், வயது வித்தியாசமின்றி அனைவராலும் ரசிக்கப்படுகிறது. இந்த படமும் அனைவராலும் ரசிக்கப்படும் என்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. கோடையில் குழந்தைகளோடு சேர்ந்து பார்க்க ஏதுவான ஒரு படம் இந்த EPIC 3D.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postஇரட்டிப்பு மகிழ்ச்சியில் ஷாம்!!
