சென்னையில் ஒரு நாள் கூட்டணியின் அடுத்த படம் புலிவால்!!

ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபனின் மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த படம் சென்னையில் ஒரு நாள். உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி வந்த இந்த படம் பெற்ற வெற்றி இந்த தயாரிப்பாளர்களின் நட்பை மேலும் வலுவாக்கியுள்ளது. இப்போது இந்த இருவரும் இணைத்து மேலும் சில தமிழ் படங்களை தயாரிக்க முன் வந்துள்ளனர்.
இவர்கள் இணைந்து தயாரிக்கும் அடுத்த படம் புலிவால். பிரசன்னா நடித்த ‘கண்ணும் கண்ணும்’ படத்தை இயக்கிய ஜி.மாரிமுத்து இயக்கும் இந்தப் படத்தில் விமல், பிரசன்னா இணைந்து நடிக்கின்றனர். பிரசன்னா சென்னையில் ஒரு நாள் படத்திலும் நடித்துள்ளார். அவர்களுடன் அனன்யா, ஓவியா, இனியா என்று மூன்று மலையாள நாயகிகள். சென்னையில் ஒரு நாள் போலவே இந்த படமும் ஒரு மலையாள படத்தின் ரீமேக் தான்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous PostEPIC 3D - விமர்சனம்:
