Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஷாம்!!

•On May 18, 2013
shaam_19_319200882621123_thumbnail
Share
தெலுங்கில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுரேந்தர் ரெட்டியுடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார் ஷாம். சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் ஷாம் முதன்ம முதலாக நடித்த படம் கிக்(Kick). தெலுங்குத் திரையுலகில் இந்தப் படம் வெளிவந்து 30 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. ரவிதேஜாவிற்கு நீண்ட நாட்கள் கழித்து ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. கிக் தமிழில் தில்லாலங்கடி என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது! அதிலும் ஷாம் நடித்தார். அதன் பிறகு சுரேந்தர் ரெட்டியின் இயக்கத்தில் ஒசரவள்ளி என்கிற வெற்றிப் படத்தைக் கொடுத்த ஷாம், மூன்றாவது முறையாக அவரது இயக்கத்தில் ரேஸ் குர்ரம் (Racegurram) என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. ஷாம் குறித்து இயக்குனர் சுரேந்தர் ரெட்டி கூறும் போது, “என்னைப் பொருத்தவரையில் ஷாம் ஒரு லக்கி சார்ம் (Lucky Charm)  நானும் அவரும் இணைந்து பணியாற்றும் படங்கள் அத்துனையும் வெற்றிப்படங்களே! இந்தப் படத்தில் ஒரு ஃபன் லவிங்பாயாக (Fun Loving Boy)  நடிக்கவிருக்கிறார். தொடர்ந்து அவருடன் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருக்கிறது.” என்றார். இன்னொரு சந்தோஷமான விஷயம், இயக்குனர் வி.இசட்.துரை இயக்கத்தில் வித்தியாசமான கெட்அப்-களில் ஷாம் நடித்திருக்கும் 6 படத்தின் விநியோக உரிமையை ஸ்டுடியோ 9, அபி&,அபி, மற்றும் வி ஹவுஸ் ப்ரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் வாங்கியுள்ளன. ஸ்டுடியோ 9, அபி &, அபி மற்றும் வி ஹவுஸ் ப்ரொடக்சன்ஸ் இணைந்து வெளியிட உள்ளது ஸ்ரீகாந்த் தேவாவின் அதிரடி இசையில் உருவான 6 படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பினைப் பெற்றிருக்கும் நிலையில் 6 படமும் விரைவில் வெளியாகவுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.