Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விஞ்ஞானிக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின்..!

•On October 3, 2014
Vingyani Press Meet (1)
Share

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலைபார்த்துவந்த பார்த்தி அதை உதறிவிட்டு சினிமாவில் நடிக்க வந்திருக்கிறார் என்றால் அவருக்கு சினிமா மீது எவ்வளவு தாகம் இருந்ந்திருக்க வேண்டும்..? ஒரு பக்கம் அறிவியலை வியாபாரம் ஆக்கும் மார்க்கெட்டிங்கை பண்ணிக்கொண்டே ‘விஞ்ஞானி’ என்ற படத்தை தயாரித்து, தானே இயக்கி நடித்தும் இருக்கிறார்.

மூவாயிரம் வருஷத்துக்கு முந்தைய விஷயத்தையும் தற்போது நடக்கும் நிகழ்வுகளையும் வைத்து எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ளப்போகும் பிரச்சனை ஒன்றைத்தான் படமாக்கியுள்ளாராம் பார்த்தி. படத்தில் இவருக்கு ஜோடி நம்ம ‘சண்டக்கோழி’ மீரா ஜாஸ்மின் தான்.

இந்தப்படத்தின் திரைக்கதை, டைரக்ஷன் மேற்பார்வை என பார்த்திக்கு பக்கபலமாக இருந்து உதவியிருக்கிறார் ‘வைத்தீஸ்வரன்’ இயக்குனரான ஆர்.கே.வித்யாதரன். விவேக், தேவதர்ஷினி முக்கிய வேடங்களில் நடிக்க இன்னும் இரண்டு கதாநாயகிகளும் உடன் நடித்திருக்கிறார்கள்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.