Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சோஷியல் மீடியா பிரச்சனையை டீல் செய்யும் சரத்குமார்..!

•On October 2, 2014
IMG (34)
Share

விஞ்ஞானம் வளர வளர அத்துடன் பிரச்சனைகளும் சேர்ந்து வளரும் தானே.. குறிப்பாக மொபைல் பொன் வந்தபோது பல விதமான பிரச்சனைகளும் கிளம்பின. அதேபோல இணைய தளத்தின் பயன்பாடும் அதிகரிக்க அதிகரிக்க விதம் விதமான குற்றங்களும் பெருக ஆரம்பித்துவிட்டன.

அப்படி ஒரு பிரச்சனையை மையமாக வைத்து தான் ‘நீ நான் நிழல்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஜான் ராபின்சன். இவர் இயக்குனர் கே.எஸ்.அதியமானிடம் வேலை பார்த்தவர். இந்தப்படத்தில் சரத்குமார் அன்வர் அலி என்கிற மலேசிய போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அர்ஜூன் லால் - இஷிதா இளம் ஜோடியாக நடிக்க முக்கிய வேடத்தில் நடிக்கிறார் மனோஜ் கே.ஜெயன்.

13 வயது முதல் 17 வயது வரையிலான தடுமாற்றம் தரும் டீனேஜ் பருவத்தில் உள்ள குழந்தைகள் இந்த சோஷியல் மீடியாக்களால் எப்படி திசைமாறிப்போகின்றனர் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார்களாம். இந்தப்படம் ரிலீசாகும் முதல் நாள் மட்டும் அனைவருக்கும், குறிப்பாக டீனேஜ் பருவத்தில் இருக்கும் மாணவர்கள் என்பதற்காகவே இலவச காட்சியாக திரையிட முடிவு செய்திருக்கிறார்கள்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.