“தயாரிப்பாளருக்கு என் மீது என்ன கோபமோ?” – அரக்கோணம் ஹீரோ ஜித்தேஷ்..!

கடந்த வாரம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘தலக்கோணம்’ படத்தின் ஹீரோ ஜிதேஷ்.. தியேட்டர் ஆர்ட்டிஸ்டான இவர் ‘சிக்கி முக்கி’ என்கிற படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார். ‘தலக்கோணம்’ படத்தில் இவருக்கு ஏகப்பட்ட சண்டைக்காட்சிகள். ஆனால் இதில் எதிலுமே டூப் போடாமல் நடித்திருக்கிறார் என்பது தான் சிறப்பு.
குறிப்பாக இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை படமாக்கும்போது படத்தின் தயாரிப்பாளர் அழுதுவிட்டார் என்கிறார் ஜித்தேஷ். ஆனால் அப்படிப்பட்ட தயாரிப்பாளர் உங்களை ஏன் பத்திரிகையாளர் காட்சியின்போது அழைக்கவில்லை என கேட்டால், “தெரியவில்லை.. தயாரிப்பளருக்கு என் மீது என்ன கோபமோ.. இன்று வரைக்கும் எனக்கு அதைப்பற்றி தெரியாது” என்கிறார் அப்பாவியாக.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
