கரைபுரளும் உற்சாகத்தில் கார்த்தி...!

படம் ஹிட் என்று தெரிந்துவிட்டால் சக்சஸ்மீட் நடத்துவது தானே வழக்கம். நேற்று ‘மெட்ராஸ்’ படக்குழுவினரும் அதையே தான் செய்தார்கள். ஆனால் படத்தின் வெற்றி 100 சதவீதம் உண்மையானது என்பதால் கார்த்தி உட்பட அதில் கலந்துகொண்ட அனைவருமே கரைபுரளும் சந்தோஷத்தில் திளைத்தார்கள்.
இப்படி ஒரு வெற்றிக்குத்தானே இத்தனை நாளாக காத்துக்கொண்டிருந்தார் கார்த்தி.. கார்த்தியின் உற்சாகம் அவர் பேசிய பேச்சிலும் நன்றாகவே தெரிந்தது. சொல்லப்போனால் கார்த்தி இந்தப்படத்தின் மூலம் வெற்றிப்படங்களுக்கான சூட்சுமங்களை கண்டுபிடித்திருப்பார் என்றே தெரிகிறது.
படத்தில் ஜானியாக கலக்கிய ஹரி, அன்புவாக அடித்து துவைத்த கலையரசன் உட்பட அனைவரும் தங்களது அனுபவத்தை பகிர்ந்துகொண்டபோது சென்னையின் வெளிப்படாத பல முகங்கள் நமக்கு தெளிவாக தெரிய ஆரம்பிக்கிறது.. கீப். இட் அப் கார்த்தி...! இனி விட்டுவிடாதீர்கள்..
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
