Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பத்திரிகையாளர் தரப்பு சிக்கலை தீர்க்க ஆதரவுக்கரம் நீட்டிய விஷால்..!

•On September 27, 2014
IMG_7989
Share

கடந்த ஒரு வார காலமாக தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பத்திரிகையாளர் தரப்பிற்கும் ஒரு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரச்சனை பெரிதாகும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சூழலில்தான் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு நடித்துள்ள ஜீவா படத்தின் பத்திரிகையாளர் சிறப்ப்பு காட்சிக்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால் அங்கே ஒரு சில பத்திரிகையாளர்களை அனுமதிக்க மறுக்கும் அளவுக்கு அசாதாரனமான் ஒரு சூழல் உருவானது. ஆனால் இது குறித்து ஜீவா படத்தை வெளியிடும் நடிகர் விஷாலுக்கு தெரிவிக்கப்பட, அவர் அனைத்து பத்திரிகையாளர்களும் படம் பார்க்கும்படி ஆதரவுக்கரம் நீட்டினார். தற்போது இருதரப்பினருக்குமான் பிரச்சனைகள் பேசி தீர்க்கப்பட்டுள்ளதால் பிரச்சனைக்கு தற்காலிக முடிவு எட்டப்பட்டுள்ளதாக பத்திரிகையாளர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.