Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்த நடிகை...!

•On September 27, 2014
Mugamoodi-Press-meet
Share

முகமூடி படத்தில் நடித்த சூப்பர் ஹீரோயின் பூஜா ஹெக்டேவை மறந்திருக்க மாட்டீர்கள் தானே.. மிக பயங்கரமான பில்டப்புடன் அறிமுகமாகி ஒரே படத்துடன் தமிழ்சினிமா(வுக்கு) குட்பை சொன்ன நடிகை.. இப்போது இவர் மணிரத்னம் படத்தில் நடிக்க அழைத்தபோது அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாகவும் மணிரத்னத்திடம் மரியாதைக்குறைவாக நடந்துகொண்டதாகவும் பரபரப்பான செய்திகள் கசிந்துள்ளன.

விசாரித்த வகையில் அதில் வாய்ப்பை மறுத்தது உண்மை என்பதும் மரியாதைக்குறைவாக நடந்துகொண்டார் என்று சொல்லப்படுவது போய் என்றும் தெரியவந்துள்ளது. அதாவது மணிரத்னம் உதவியாளர் அழைப்பின் பேரில் சென்னை வந்து மணிரத்னத்தை சந்தித்துள்ளார். அப்போது அவரது படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கும்படி கேட்டுள்ளார் மணிரத்னம்.

மணிரத்னம் படத்தில் நடிக்க கசக்குமா என்ன? ஆனாலும் பூஜாவால் இந்த வாய்ப்பை ஏற்கமுடியாத நிலைமை. காரணம் இந்தியில் அஷுதோஷ் கோவரிகர் இயக்கம் 'மொகஞ்ச-தாரோ’ என்ற படத்தில் நடிப்பதற்காக நிறைய நாட்களை ஒதுக்கி கொடுத்துள்ளார் பூஜா.

அதே தேதிகள் உட்பட மொத்தமாக ஆறுமாதங்கள் கால்ஷீட் மணிரத்னம் படத்திற்கும் கேட்கப்பட, நிலைமையை சொல்லி மரியாதையுடன் தான் அந்த வாய்ப்பை மறுத்துள்ளார் பூஜா ஹெக்டே. மணி சார் படத்தில் நடிக்க முடியாதது தனக்கு மிகப்பெரிய இழப்பு என கூறும் பூஜா, எப்படியும் அடுத்தமுறை அவர் படத்தில் நடித்தே தீருவேன் என்றும் கூறியுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.