Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ரோம் பிலிம் பெஸ்டிவெலில் இடம்பிடித்த ‘காக்கா முட்டை’..!

•On October 3, 2014
7A3_tamil-movie-Kaaka-Muttai
Share

தனுஷ், வெற்றிமாறன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் தான் ‘காக்கா முட்டை’. ஆனால் இதில் தனுஷ் நடிக்கவுமில்லை.. வெற்றிமாறன் இயக்கவும் இல்லை.. இந்தப்படத்தை வெற்றிமாறனின் உதவியாளரும் 'உதயம் என் எச்-4 படத்தின் இயக்குனருமான மணிகண்டன் இயக்கியுள்ளார்.

‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ புகழ் ஐஸ்வர்யா கதையின் நாயகியாக நடிகக, மற்றும் புதுமுகங்கள் பலர் நடிக்கும் இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வாழும் குழந்தைகளின் இருப்பிடம் மற்றும் அவர்களது வாழ்க்கையை மையமாக வைத்து படம் தயாராகியுள்ளது

கடந்தமாதம் தான் இந்தப்படம் டொராண்டோ பிலிம் பெஸ்டிவலில் திரையிடப்பட்டு அனைவரின் பாராட்டுக்களையும் அள்ளியது. அதற்குள் இப்போது வரும் அக்-16ஆம் தேதி ரோமில் துவங்க இருக்கும் ரோம் பிலிம் பெஸ்டிவெலிலும் ‘காக்கா முட்டை’ திரையிடப்பட இருக்கிறது.. அதுசரி.. எங்களுக்கு எப்ப தியேட்டர் ரிலீஸ் மூலமா கண்ணுல காட்டுவீங்கன்னு சொன்னா நல்லா இருக்கும்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.