Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

முகேஷ் அம்பானிக்கு முதலிடம்....

•On May 17, 2017
ambani
Share
ambani என்னடா எதுக்கு முகேஷ் அம்பானிக்கு முதலிடம் அப்படினு பாக்குறிங்களா. அது என்னனு தலைப்புல சொல்லிட்டா சுவாரஸ்யம் இல்லாம போய்டும்ல அதா சொல்லல. அது வந்து எதுக்குனு தெரிஞ்சிக கிழ உள்ளத படிங்க புரியும். அதவாது இப்போ இருக்குற துணிச்சலான தொழிலதிபர்கள், தங்களது தொழிற்சாலைகளை கொண்டு பல்லாயிரக்கான ஊழியர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்தவர்கள் போன்ற அடிப்படைகளை கொண்டு போர்பஸ் பத்திரிக்கையானது ஆண்டு தோறும் 'குளோபல் கேம் சேஞ்சர்' என்ற பெயர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2017 ம் ஆண்டிற்கான உலகை மாற்றியவர்கள் பட்டியலை போர்பஸ் வெளியிட்டுள்ளது. 2017 ம் ஆண்டில் 2வதாக வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த முக்கிய தொழிலதிபர் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவராக இருக்கும் அம்பானி, எண்ணெய் சுத்திகரிப்பு, தொலைத்தொடர்பு துறை, எரிவாயு போன்ற தொழில் சந்தைகளில் முன்னிலையில் இருந்து வருகிறார். சமீபத்தில் இந்நிறுவனத்தின் சார்பில் வெளிவந்த 'ஜியோ' தொலைத்தொடர்பு சந்தையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது முக்கிய காரணமாகும். ஜியோ அறிமுகம் செய்யப்பட்ட 6 மாதங்களில் 1 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. 25 பேர் கொண்ட இப்பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் இடம் பெற்றுள்ளனர். வீட்டு உபயோக பொருட்கள் நிறுவனமான டைசன் நிறுவனர் ஜேம்ஸ் டைசன், அமெரிக்காவின் பிளாக்ராக் இணைநிறுவனர் லேரி பின்க் உள்ளிட்டோரும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.