இரண்டாவது முறையாக சிம்புவுடன் நடிக்கும் சிலம்பாட்டம் கதாநாயகி...

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் அஅஅ படத்தில் சிம்பு நான்கு வேடங்களில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. சிம்பு சொன்னதையெல்லாம் ஆதிக் எடுத்ததால், ஏகப்பட ஸீன்களை எடுத்துத் தள்ளிவிட்டார்களாம். இது தயாரிப்பாளருக்குத் தெரிந்து சத்தம் போட, உடனே இரண்டு பாகங்களாக வெளியிடுகிறோம் என்று சமாளித்துவிட்டனர் படக்குழுவினர்.
இந்தப் படத்தில், சிம்பு மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்று முதலில் கூறப்பட்டது. மூன்று கேரக்டர்களுக்கும் ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா, மற்றும் நீத்து சந்திரா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். ஆனால், மொத்தம் நான்கு கேரக்டர்களில் சிம்பு நடிக்கிறார் என இப்போது அறிவித்துள்ளனர். நான்காவதாக பாலிவுட் நடிகை, மாடல் மற்றும் டான்சரான சனா கான் நடிக்கிறார்.
இதற்கு முன்னதாக சனா கான் சிம்புவுடன் இணைந்து சிலம்பாட்டம் படத்தில் கலக்கியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 2வது முறையாக அவருடன் இணைந்து நடிப்பது எனக்கு த்ரில்லாக இருக்கிறது என்று சனா கான் தெரிவித்துள்ளார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postரெமோ-க்கு மலேசியாவில் ரசிகர் மன்றம்...
Next Postமுகேஷ் அம்பானிக்கு முதலிடம்....
