Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மீண்டும் நடிக்க வந்துவிட்டார் ஜோதிகா..!

•On August 14, 2014
jyothika-hairstyles6
Share

2007ல் வெளியான ‘மணிகண்டா’ படம் தான் ஜோதிகா நடித்து கடைசியாக வெளியான படம். அதன் பின் சூர்யாவை திருமணம் செய்துகொண்டு கணவர், குழந்தைகள் என செட்டில் ஆனவர் விளம்பரப்படங்களில் நடித்தாரே தவிர சினிமா பக்கம் எட்டிக்கூட பார்க்க விரும்பவில்லை.

சமீபத்தில் கூட சூர்யா, நல்ல கதைகள் கிடைத்தால் ஜோதிகா நிச்சயம் நடிப்பார் என சொல்லியிருந்தார். அப்படி ஒரு நல்ல கதை இப்போது ஜோதிகாவை தேடி வந்துள்ளதால் மீண்டும் மேக்கப் போட தயாராகி விட்டார் ஜோதிகா..

மலையாளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் ஜோதிகா நடிக்க இருக்கிறார். மலையாளத்தில் இந்தப்படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் தான் தமிழிலும் இயக்குகிறார். சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘2டி என்டெர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தான் இந்தப்படத்தை தயாரிக்கிறது.

மலையாளத்தில் நீண்ட நாட்கள் கழித்து ரீ என்ட்ரியாக உள்ளே நுழைந்த மஞ்சு வாரியருக்கு இந்தப்படம் மிகப்பெரிய பிரேக் கொடுத்திருக்கிறது. அதே படத்தின் ரீமேக்கிலேயே ஜோதிகா மீண்டும் என்ட்ரியாவது ஆச்சர்யமான விஷயம் தான்..

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.