“சமூக சேவையை பாதிக்காத வகையில் நடிக்க நேரம் ஒதுக்குவேன்” – அமலா..!

இதுவும் கூட ஒரு நடிகையின் மறு பிரவேச கதை தான். 1990களில் கமல், ரஜினிக்கு ஜோடியாக நடித்து தனது அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை கிறங்கடித்த அமலா, 22 வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். ஆனால் சீரியல் பார்க்கும் ரசிகர்களுக்குத்தான் அவரது தரிசனம் கிடைக்கப்போகிறது.
ஆமாங்க.. ஜீ தமிழ் சேனல் தயாரிக்கும் ‘உயிர்மெய்’ என்கிற நெடுந்தொடரில் பிசியாக நடித்து வருகிறார். நாம் நம்பமாட்டோம் என்று நினைத்தாரோ என்னவோ, அம்பத்தூரில் தான் நடித்துவரும் ‘உயிர்மெய்’ சீரியலின் படப்படிப்பு தளத்துக்கே பத்திரிகையாளர்களை வரவழைத்து சந்தித்தார் அமலா.
“இந்த தொடரின் தயாரிப்பாளர் ரமேஷ் இந்த கதையை சொன்னபோது அதை தட்ட முடியவில்லை. இதில் நான் டாக்டராக நடிக்கிறேன். இதுவரை நான் நடித்த படங்களில் டாக்டராக நடிக்கவில்லை என்கிற குறை இருந்துகொண்டிருந்தது. அது இப்போது தீர்ந்துவிட்டது. என்னுடைய சமூக சேவைகள் பாதிக்காத அளவுக்கு இரண்டையும் சரியாக பேலன்ஸ் செய்துகொள்வேன்.. ஆனால் சினிமாவில் நடிக்கின்ற எண்ணம் எனக்கு இல்லை” என்று கூறினார் அமலா.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
