‘வீரம்’ கூட்டணியை மீண்டும் உருவாக்க தீவிரம் காட்டும் டோலிவுட்..?

இரண்டு மாத இடைவெளியில் இரண்டு படங்கள்.. இரண்டுமே பாராட்டக்கூடிய வெற்றிகள்.. இதுதான் அஜித்தை தற்போது டோட்டலாக மாற்றியிருக்கிறது. வருடத்துக்கு இரண்டு படம் தந்துவிடுவது என்ற உறுதியை அஜித் எடுத்ததால் தான், ‘வீரம்’ ரிலீஸான உடனேயே அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டார்.
முன்பெல்லாம் ஒரு படம் முடிந்து நீண்ட நாட்கள் கழித்து தான் அஜித் படத்தை யார் இயக்கப்போகிறார் என்பதே தெரியவரும்.. ஆனால் இப்போது அவரை அடுத்தடுத்து இயக்க இருக்கும் டைரக்டர்களின் பட்டியல் பளிச்சென்று தெரிகிறது. அந்த வகையில் கௌதம் மேனன் தற்போது இயக்குவது அஜித்தின் 55வது படம்.
இதை தொடர்ந்து கே.வி.ஆனந்த், அதன்பின் அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் விஷ்ணுவர்தன், மீண்டும் சிறுத்தை சிவா என பட்டியலில் இருந்தாலும் அவரது 56வது படத்தை சிறுத்தை சிவாதான் இயக்குவார் என்பதுதான் உறுதியாக தெரிகிறது.
காரணம் கே.வி.ஆனந்த் ‘அநேகன்’ படத்திலும் விஷ்ணுவர்தன் ‘யட்சன்’ படத்திலும் பிசியாக இருப்பதால் கௌதம் படம் முடிந்ததும் சிறுத்தை சிவாவுக்குத்தான் அஜித் எஸ் சொல்ல வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதற்கேற்றாற்போல் வீரம்’ ஹிட்டைத்தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் சிறுத்தை சிவா-அஜித் காம்பினேஷனுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அங்குள்ள தயாரிப்பாளர்கள் இப்போதே அட்வான்ஸாக பணத்தை இறக்க துடித்துக்கொண்டு இருக்கிறார்களாம். சிவாவும் இந்தப்படத்திற்கான டெக்னீசியன்களை தேர்வு செய்து பைனலும் செய்துவிட்டதாக கேள்வி. ஆக இதுகுறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் என்று தெரிகிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
