மீகாமன் படத்திற்கு உதயநிதி கொடுத்த சர்டிபிகேட்..!

ஆர்யா தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘மீகாமன்’ என்ற படத்தில் நடித்து முடித்து விட்டார்.. ஆர்யாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ள இந்தப்படம் வரும் டிச-25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டமாக ரிலீஸாகிறது.
ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இந்தப்படத்திற்கு தமன் இசையமைக்க சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ‘நான் அவன் இல்லை’, ‘மாப்பிள்ளை’ உட்பட பல படங்களை தயாரித்த நேமிசந்த் ஜபக் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது.
இந்தப்படத்தின் சிறப்புக்காட்சி திரையுலகில் உள்ள சிலருக்கு, குறிப்பாக ஆர்யாவின் நட்பு வட்டாரத்துக்காக ஒரு முறை திரையிட்டு காட்டப்பட்டது. அவர்களில் ஆர்யாவின் நெருங்கிய நண்பரான உதயநிதியும் ஒருவர்.. படம் பார்த்துவிட்டு ‘மீகாமன் படத்தை பார்த்ததில் மகிழ்ச்சி. படத்தை அழகாக செதுக்கியிருக்கிறார்கள்.. ஜம்மி(ஆர்யா)க்கும் மகிழ்திருமேனிக்கும் என் வாழ்த்துக்கள்” என டிவிட்டரில் பாராட்டியுள்ளார்.
 ,
 ,
 ,
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
