"மாயமோகினி" இசை வெளியீடு

கண்ணன் கிரியேஷன்ஸ் சார்பில் கே.தங்கவேலு தயாரித்துள்ள படம் "மாயமோகினி". இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராசா விக்ரம் இயக்கியுள்ளார். இதில் ஹீரோவாக அப்துல்லா நடிக்க ஹீரோயினாக சரிகா, ஜோதிஷா ஆகியோர் நடிக்க, இவர்களுடன் கே.ஆர்.விஜயா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், ஸ்.என்.பார்வதி, ஆஷா, பூவிலங்கு மோகன், பாய்ஸ் ராஜன், மகாநதி சங்கர், இமான் அண்ணாச்சி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
எம்.ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கே.வி.ராஜன் ஒளிப்பதிவு செய்ய, டி.எஸ்.லெட்சுமணன் படத்தொகுப்பு செய்கிறார். தீப்பொறு நித்தியா சண்டைப்பயிற்சியை மேற்கொள்ள, ராம் முருகேஷ் நடனம் அமைக்கிறார். நெல்லை சுந்தரராஜன் மக்கள் தொடர்பை கவனிக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று மாலை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் நடிகை கே.ஆர்.விஜயா பாடல்கள் குறுந்தகடை வெளியிட, அதை தமிழ் வர்த்தக சபை தலைவரும், சென்னை திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவருமான அபிராமி ராமநாதன் பெற்றுக் கொண்டார். மேலும், கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் தங்கவேலு, இயக்குநர் ராசா விக்ரம் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய அபிராமி ராமநாதன், "இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கே.ஆர்.விஜயாவுக்கும் எனக்கும் நெடுநாள் தொடர்பு உண்டு. ஆம், அபிராமி திரையரங்கத்தை கட்டுவதற்கு, அவர்களது செங்கல்லை தான் பயன்படுத்தியிருக்கிறோம். அப்போதே அந்த கல் ஒன்று ரூ.1 ஆகும். அந்த அளவுக்கு உறுதியான கல் அது. அதேபோல, கவர்ச்சி நடிகைகளில் வித்தியாசமானவர் கே.ஆர்.விஜயா. அவர் நடித்துள்ள இந்த படமும் வித்தியாசமானதாக இருக்கும். நிச்சயம் இப்படம் வெற்றி பெறும்." என்றார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Next Post"தொண்டன்" திரைப்பட விமர்சனம்...
