"தொண்டன்" திரைப்பட விமர்சனம்...

இப்படத்தில் சமுத்திரக்கனி இயக்கி அவரே நடித்தும் உள்ளார். கதாநாயகியாக சுனைனா நடித்துள்ளார். வசுந்தரா தேவி பிலிம்ஸ் தயாரிப்பில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் விக்ராந்த், சூரி, தம்பி ராமைய்யா, கஞ்சா கருப்பு, பேராசிரியர் கு .ஞானசம்பந்தம்,வேல ராமமூர்த்தி, நமோ நாராயணன், அனில் முரளி, 'பிச்சைக்காரன்' மூர்த்தி சவுந்தரராஜன், திலீபன் என்று ஒரு சின்ன பட்டாளமே நடித்துள்ளனர்.
சமுத்திரக்கனி படம் என்றாலே ஒரு கருத்து சொல்லி இருப்பார். அதே போன்று இப்படத்தில் பல கருத்துக்களை வாரி கொட்டியுள்ளார். அதாவது நம்ம விவசாயி, ஜல்லிக்கட்டு, ஜாதி பார்த்தல் இப்படி பல பிரச்சனையை பற்றி கருத்துகளை தெரிவித்துள்ளார். இப்படம் பல இடங்களில் வயிறு வலிக்க சிரிக்க வைத்தாலும் சிந்திக்கவும் வைத்துள்ளது.
மேலும் இப்படத்தில் சமுத்திரக்கனி எப்போழுதும் போல் கதை முழுவதையும் தூக்கி சென்றுள்ளார். சுனைனா சாதாரணமாக வந்து செல்கிறார். இப்படத்தில் விக்ராந்த்திற்கு கைத்தட்டல் குவித்துள்ளது. மேலும் சூரி, தம்பி ராமைய்யா சில இடங்களில் வந்தாலும் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளனர். மொத்தத்தில் இப்படம் குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய படம். Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Post"மாயமோகினி" இசை வெளியீடு
