Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

பத்து வருஷத்துக்கு முன்னாடி ‘கெட்ட டைட்டில்’.. இப்ப ‘நல்ல டைட்டில்’ ஆகிருச்சா..?

•On July 18, 2014
Sandiyar
Share

ஒரு பிளாஸ்பேக் பார்த்துட்டு விஷயத்துக்கு வருவோம்.. பத்து வருஷத்துக்கு முன்னாடி கமல் முதன்முதலா இயக்கி நடிச்ச ‘விருமாண்டி’ படம் வெளியானது உங்களுக்கு தெரியும். ஆனா அந்த படத்துக்கு அவர் முதல்ல வச்ச பேர் ‘சண்டியர்’. ஆனா அந்தப்பேரை டைட்டிலா வச்சுட்டு அவர் பட்ட கஷ்டங்கள் இருக்கே.. அப்பப்பா..

ஒரு பக்கம் புதிய தமிழகம் கட்சியின் தலைவரான கிருஷ்ணசாமி இந்த டைட்டிலை வைக்க கூடாதுன்னு போராட்டம் பண்ண ஆரம்பிச்சுட்டார்.. இன்னொரு பக்கம் அப்போ முதல்வரா இருந்த ஜெயலலிதாவும் பிரச்சனைன்னு தெரியுதில்ல.. பேசாம டைட்டிலை மாத்திருங்கன்னு கூலா சொல்லிட்டார்.(சொல்லபோனா அம்மாவுக்கும் கமலுக்கும் அப்பவே முட்டிக்கிடுச்சு). அதுக்குப்புறம் தான் ‘விருமாண்டி’ன்னு டைட்டிலை மாத்தினார் கமல்.

இப்போ விஷயத்துக்கு வருவோம்.. இப்போ அதே ‘சண்டியர்’ டைட்டிலை வச்சு ஒரு படம் தயாராகி சென்சார்ல U/A சர்டிபிகேட்டும் வாங்கி ஆகஸ்ட்-1ல ரிலீசாகவும் இருக்குது. சோழதேவன்ங்கிற புது இயக்குனர் இயக்கியுள்ள இந்தப்படத்துல நடிச்சுருக்கவங்களும் புதுமுகங்கள் தான்.. இப்பவும் அம்மா தான் முதல்வர்.. புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் பீக்லதான் இருக்கார்.. பத்து வருஷம் ஆயிட்டதால இப்ப மட்டும் இந்த டைட்டில் சரியாகிடுமா என்ன..?

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.