நரேன் கார்த்திகேயன் ஜெய்க்கு கொடுத்த டிப்ஸ்..!

கார் ரேஸ், பைக் ரேஸ் என்று அமர்க்களப்படுத்திக்கொண்டிருந்த அஜீத் தற்போது நடிப்பில் மட்டுமே கவனமாக இருக்கிறார். ஆனால் அவரைத் தொடர்ந்து அவரது ரசிகரான நடிகர் ஜெய்யும் கார் ரேஸ் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
நடிக்கும் படங்களில் எல்லாம் பயந்த சுபாவமாகவே வரும் ஜெய் கார் பந்தயத்தில் கலந்துகொள்வதில் ஆர்வமுள்ளவர் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் கடந்த ஏழு மாதங்களாக இதற்காக பயிற்சி எடுத்து வந்த ஜெய், கடந்த மாதம் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற பந்தயத்தில் முதன் முதலாக கலந்துகொண்டார்.
சென்னையில் நடைபெற்ற ரேஸில் தகுதிபெற்ற ஜெய் அடுத்ததாக கோவை செட்டிபாளையத்தில் நடக்கும் ரேஸில் கலந்துகொள்ள இருக்கிறார். சென்னை மற்றும் கோவையில் இரண்டு சுற்றுக்களாக நடைபெறும் இந்த பந்தயத்தின் இறுதிச்சுற்றுக்கான போட்டி டெல்லியில் நடைபெறும். இந்த பந்தயங்களில் கலந்துகொள்வதுதான், அடுத்து ஃபார்முலா ரேஸ்களில் பங்கெடுப்பதற்கான முதல் படியாகும்.
தற்போது கார்பந்தய நட்சத்திர வீரரான நரேன் கார்த்திகேயனிடம் கார்பந்தயம் பற்றி விளக்கங்கள் கேட்டு தெரிந்து கொண்டாராம் ஜெய். அவரும் கார் பந்தயத்தில் எதிர்கொள்ளவேண்டிய சிக்கல்களையும் அதை அணுகும் விதத்தையும் சொல்லித் தந்திருக்கிறாராம்
படப்பிடிப்பு நாட்கள் தவிர மீதி நாட்களில் இந்த பயிற்சியில் தவறாமல் கலந்துகொண்டு கடந்த ஏழு மாதங்களாக இதற்காக பிராக்டீஸ் செய்டிருக்கிறார் ஜெய். சினிமா, ரேஸ் இரண்டையும் ஒரே நேரத்தில் தன்னால் பேலன்ஸ் செய்ய முடியும் என்கிறார் ஜெய்..
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
