Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

"லோசேல் ஏசியன் ரோடு ரேசிங் சீரிஸ்" இருசக்கர பந்தயத்தில் நடிகர் திலிப் ரோஜர் பரிசுகளை வென்றார்:

•On July 18, 2014
DSCI0021
Share
கத்தார் நாட்டில் உள்ள "லோசேல் இன்டர்நேஷனல் சர்கியூட்" என்னும் இருசக்கர பந்தய தலத்தில் சென்ற மே 09,10 தேதிகளில் "லோசேல் ஏசியன் ரோடு ரேசிங் சீரீஸ்" என்னும் தேசிய அளவிலான இருச்சக்கர மோட்டார் பந்தயம் நடைபெற்றது. அதில் ஆசிய கண்டத்திலிருந்து பல வீரர்களும், உக்ரேன், அமெரிக்கா, ஆஸ்திரியா போன்ற நாடுகளிலிருந்தும் பலர் கலந்துகொண்டனர். இந்தியாவிலிருந்து சென்னையை சேர்ந்த நடிகர் திலிப் ரோஜர் கலந்துகொண்டார். PYRRA மற்றும் FMSCI நிறுவனங்கள் திலிப் ரோஜர் கத்தாரில் நடைபெற்ற தேசிய அளவிலான இருசக்கர மோட்டார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்கான செலவுகளை மேற்கொண்டனர். திலிப் ரோஜர் இரு பந்தயங்களில் கலந்து கொண்டு முதல் பந்தயத்தில் 3'வது இடத்தையும், இரண்டாவது பந்தயத்தில் 2'வது இடத்தையும் வென்றுள்ளார். முதல் பந்தயத்தில் ஹங்கேரி நாட்டை சேர்ந்த விக்டோரியா கிஸ் என்பவர் முதல் இடத்தையும், அமெரிக்க நாட்டை சேர்ந்த செலின மோரிட இரண்டாவது இடத்தையும் நம் தமிழ் நாட்டை சேர்ந்த திலிப் ரோஜர் மூன்றாவது இடத்தையும் பெற்றனர். இரண்டாவந்து பந்தயத்தில் ஹங்கேரி நாட்டை சேர்ந்த விக்டோரியா கிஸ் என்பவர் முதல் இடத்தையும், தமிழ் நாட்டை சேர்ந்த திலிப் ரோஜர் இரண்டாவது இடத்தையும் அமெரிக்க நாட்டை சேர்ந்த மான்க கட்ராசனிக் மூன்றாவது இடத்தையும் பெற்றனர். நம்மிடம் பேசிய திலிப் ரோஜர் கூறும்போது தான் கத்தாரிலுள்ள அந்த "லோசேல் இன்டர்நேஷனல் சர்கியூட்" என்னும் இருசக்கர பந்தய தலத்தில் இருச்சகர மோட்டார் பந்தயத்தில் கலந்துகொள்வதோ அல்லது பயிற்சி செய்வதோ இதுவே முதன் முறை என்று குறிப்பிட்டார். பந்தயம் ஆரம்பிப்பதற்கு முன்பாக அவருக்கு சிறிது நேரம் அந்த தலத்தில் பயிற்சி செய்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டதாகவும் அதில் அவர் சுமார் அரை மணி நேரம் தன்னுடைய இருச்சகர வாகனத்தில் பயிற்சி செய்ததாகவும் தெரிவித்தார். அடுத்த முறை இங்கு நடக்கும் பந்தயத்தில் தன்னுடைய பந்தயத்தின் மணியளவில் மற்றும் வாகன ஓட்டத்தில் அதிக முனேற்றம் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் திலிப் ரோஜர். திலிப் ரோஜர் இரு சக்கர வாகன பந்தயத்தில் பிரபலமானவராக இருந்தாலும் நடிப்பு என்பதில் ஈர்ப்பு கொண்டு 2012'ல் வெளியான "உடும்பன்" தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகினார். உடும்பன் படத்தில் நன்றாக நடித்திருந்தாலும் படம் வெற்றி பெற்றிருப்பினும் அவருக்கு நடிப்பு துறையில் சரியான வாய்புகள் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 1 2 3 DSCI0021 DSCI0022 DSCI0041 podium 2

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.