“ரஜினிக்கு ஒன்றுமில்லை.. வதந்திகளை நம்பாதீர்கள்..” – கே.எஸ்.ரவிகுமார்:

ரஜினிக்கும் சரி.. அவர் நடித்துவரும் லிங்காவுக்கும் சரி.. இதுவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. அப்படி இருப்பது சில பக்கிகளின் கண்களை உறுத்திக்கொண்டே இருந்ததன் விளைவுதான் நேற்று ஒரு தினசரியில் ‘ஹைதராபாத்தில் ரஜினி மருத்துவமனையில் அனுமதி’ என வெளியான செய்தி.
ஆனால் படத்தின் இயக்குனரான கே.எஸ்.ரவிகுமார் “இது தவறான தகவல். ஹைதராபாத்தில் இப்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. ரஜினி அதில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.. நலமுடன் இருக்கிறார். தயவு செய்து வதந்திகளை நம்பாதீர்கள்” என கூறியுள்ளார்.
பத்திரிக்கை பரபரப்பா விக்கனும்ங்கிறதுக்காக இந்த அளவுக்கெல்லாமா போவாங்க...ச்ச்சீ...!
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
