Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

படத்தொகுப்பாளர் கமல்.G முதல்முறையாக இயக்கும் "யூகன்" என்னும் திகில் படம்:

•On June 20, 2014
YPNP_1
Share

அறிமுக இயக்குனர் கமல்.G இயக்கத்தில் தயாராகியிருக்கும் பரபரப்பான திகில் படம் “யூகன்”. “உ”, “ஒன்னும் புரியல” போன்ற படங்களில் படத்தொகுப்பாளராக தனது திரையுலக வாழ்க்கையை துவங்கிய கமல்.G, இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இன்றைய காலக்கட்டத்தில், ஒப்பனை மற்றும் கலை விவகாரத்தில் பெரும்பாலான இயக்குனர்கள் சில முக்கிய கட்சிகளுக்கு கணிப்பொறி வித்தகையை நம்புவார்கள். ஆனால், மிக நேர்த்தியாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம், கணிப்பொறி காட்சிகளை நம்பாமல் ஒப்பனை மூலமே திகில் படுத்தும் விதமாக படமாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்படத்தின் ஒளிப்பதிவாளரான ரவி ஆறுமுகம் பிரபல ஒளிப்பதிவாளரான சக்தியிடம் பணியாற்றியவர். கிட்டத்தட்ட ஹாலிவுட் தரத்தில் தயாராகி வரும் இப்படம் தமிழ் திரையுலகில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்துமென இயக்குனர் கமல் தெரிவித்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.