சிவகார்த்திகேயன் எதிர்பார்ப்பு, நிறைவேற்றுமா கமல் தரப்பு?

‘எதிர்நீச்சல்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே டீம் தற்போது ஒரு படத்தில் மீண்டும் இணைந்து, பரபரப்பான படப்பிடிப்பில் இருக்கிறது அந்த படம். தயாரிப்பாளர் தனுஷ், சிவகார்த்திகேயன், இயக்குனர் துரை செந்தில்குமார், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் கூட்டணிதான் அது. இந்த படத்துக்கு முதலில் ‘டாணா’ என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறினார்கள். தற்போது வேறு ஒரு தலைப்பை இறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கமல் நடித்த சூப்பர் ஹிட் படமான ‘காக்கிச்சட்டை’ தலைப்பைதான் இவர்கள் இறுதி செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் அதிகாரியாக நடிப்பதால் இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று வைத்துள்ளனராம். அதோடு இந்த கமல் படத்தலைப்பு படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று நினைக்கிறாராம்.
அதனால், அந்த படத்தின் தயாரிப்பாளரிடம் அனுமதி வாங்க வேண்டும். எனவே, அந்த படத்தின் தயாரிப்பாளரான ஆர்.எம்.வீரப்பனை அணுகி படத்தின் தலைப்புக்கு சம்மதம் வாங்க முடிவெடுத்திருக்கிறார்களாம். தலைப்பு கிடைக்குமா?? என காத்துக் கொண்டிருக்கிறார்கள்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
