Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இர்ஃபான் நடிக்கும் ஓரெழுத்து படம்

•On June 21, 2014
unnamed (41)
Share
unnamed (41) தமிழ் சினிமாவில் அவ்வப்போது ஒரு எழுத்தில் சில படங்கள் வந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது ஒரு படம் தயாராகி வருகிறது. படத்தின் பெயர் ‘ரு’. 'ரு' என்ற தமிழ் எழுத்துக்கு ஐந்து என்று ஒரு அர்த்தம் உண்டு. இதிகாசம் முதல் சமீபம் வரை ஐந்து என்ற எண் மிகவும் முக்கியத்துவம் உள்ள எண்ணாகவே பார்க்க  படுகிறது. சமூகத்தில் வாழக்கூடாத, வாழ தகுதி இல்லாத ஐந்து மனித மிருகங்களை வேட்டையாட விழைகிறான் ஒரு இளைஞன். சினிமாவில் நாயகனாக வர கனவு காணும் அவன், நிஜ வாழ்வில் நாயகனாக ஆகிறானா என்பதை அந்த ஐந்து பேர்தான் தீர்மானிக்கின்றனர். சர்வதேச அரங்கில் நமது நாடு தலை குனிய வைக்கும் ஒரு மிகப்பெரிய சமூக அவலத்தை படம்  பிடித்து காட்டும் 'ரு' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக இருக்கிறது. தொலைக்காட்சி தொடர் மூலம் அறிமுகமாகி இன்று திரை உலகில் கால் ஊன்றி நிற்கும் இர்பான் 'ரு' படத்தின் கதாநாயகன் ஆவார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.