நீ.......ண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாகிறது ‘நளனும் நந்தினியும்’

லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில் உருவான முதல் படம் ‘நளனும் நந்தினியும்’. வெங்கட்பிரபுவின் இணை இயக்குனர் வெங்கடேசன் இயக்கியுள்ளார். நல்ல நடிகர்கள் பங்களிப்புடன், இந்த படம் முதலில் தயாராகி இருந்தாலும் லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ்-ல் முதலில் வெளியானது ‘சுட்டகதை’ தான்.
இந்நிலையில் தற்போது “நளனும் நந்தினியும்” படம் ஜூலை மாதம் 11-ம் தேதி உலகம் முழுக்க வெளியாக உள்ளது. தமிழகம் முழுவதும் சொந்தமாக லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது. படத்தின் நாயகி நந்திதா நடித்த சமீபத்திய படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றிருப்பதால் படத்துக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது.
இதை தொடர்ந்து மாதம் ஒரு படத்தை வாங்கி லிப்ரா புரொடக்ஷன்ஸ் திரையிட திட்டமிட்டுள்ளதாக ரவீந்தர் சந்திரசேகரன் தெரிவித்தார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postபாக்யராஜின் உதவியாளர் இயக்கும் ‘ஆலமரம்’
