பாக்யராஜின் உதவியாளர் இயக்கும் ‘ஆலமரம்’

கிராமத்தின் பிண்ணனியில் இருந்து வரும் ஒவ்வொருவருக்கும் ஆலமரத்தின் முக்கியத்துவம் தெரிந்து இருக்கும். ஒவ்வொரு ஆலமரமும் தன்னுள் அடக்கி இருக்கும் கதைகள் அதன் விழுதுகளை விட நீளமாகவும், அதன் வேர்களை விட ஆழமாகவும் இருக்கும்.
பீகாக் pictures என்னும் புதிய பட நிறுவனம் 'ஆலமரம்' என்ற தலைப்பில் அத்தகைய ஒரு உன்னதமான பதிவை படமாக வழுங்குகின்றனர். பாக்யராஜின் உதவியாளர் எஸ்.என்.துரைசிங் இயக்குனராக அறிமுகமாகிறார். பழனிவேல் படத்தொகுப்பில், உதயசங்கரின் ஒளிப்பதிவில் உருவாகிறது 'ஆலமரம்'.
தேனீ, மதுரை ஆகிய ஊர்களின் இயற்கை அழகு கொஞ்சும் சுற்று புறங்களில் படமாக்கப்பட்ட 'ஆலமரம்' படத்தின் இசை அமைப்பாளர் ராம்ஜீவன், படத்தின் ஜீவனாக ஐந்து முத்தான பாடல்களை வழங்க உள்ளார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
