Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நீர்வரத்து அதிகரிக்கும் முல்லை பெரியாறு அணை!

•On March 13, 2017
mulla2
Share
mulla2 தமிழக, கேரள மக்களின் நீராதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணை தொடர் மழை காரணமாக முல்லை பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தேக்கடி, முல்லை பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தேக்கடியில் 18.4 செ.மீ.,ம், முல்லை பெரியாறு அணை பகுதியில் 16.6 செ.மீ.,ம் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு 281 கனஅடியில் இருந்து 643 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 109.80 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து தமிழகத்திற்கு 100 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.