Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க தடை உத்தரவு :-'தென் மண்டல பசுமைத்தீர்ப்பாயம்'..

•On March 20, 2017
green_tribunal_2
Share
green_tribunal_2 நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க சுற்றுச்சூழல் துறை அளித்திருந்த அனுமதியை ரத்து செய்து தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவை பிறப்பித்துள்ளது. தேனி, பொட்டிபுரத்தில் உள்ள மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்திருந்தது. இதனை எதிர்த்து பூவுலகின் நண்பன் அமைப்பு சார்பில் தேதிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.தமிழ்நாடு மாசுகாட்டுப்பாடு வாரியம் இந்த ஆய்வு மையம் அமைக்க அனுமதி அளிக்காத நிலையில், இந்த திட்டத்துக்கான இடைக்கால தடையை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த ஆய்வு மையம் அமைக்க பரிந்துரைத்த சலீம் பவுண்டேசன் அறிக்கை தொடர்ப்பாக விசாரணை நடத்தப்பட்ட வழக்கின் தீர்ப்பில், சுற்றுச்சூழல் துறை அளித்திருந்த அனுமதியை ரத்து செய்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு அளித்திருக்கிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.