இரு இமயங்களின் விவகாரம் ஆச்சர்யம் அளிக்கிறது! :-வெங்கையா நாயுடு..

எஸ்.பி.பாலசுப்ரமணியம் - இளையராஜா விவகாரம் ஆச்சர்யம் அளிப்பதாகவும், விரைவில் சுமூக தீர்வு ஏற்படும் என தான் நம்புவதாகவும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இசைப் பயணத்தில் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளதையொட்டி, பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், உலகம் முழுவதும் சென்று இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார்.
இசையமப்பாளர் இளையராஜா இசையமைத்த பாடல்களை பாட முன் அனுமதி பெற வேண்டும் என எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதற்கு விளக்கம் அளித்துள்ள எஸ்.பி.பி, இந்த சட்டதிட்டங்கள் பற்றிய புரிதல் எனக்கு இல்லை. இனி வரும் காலங்களில் இளையராஜா இசையில் உருவான பாடல்களை மேடையில் பாட மாட்டேன். ஆனால், கடந்த ஆண்டு தொடங்கி உலகம் முழுவதும் நடைபெற்று வரும் இந்த கச்சேரி நடக்க வேண்டும் என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இளையராஜா பாடல்களை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுவதில் பிரச்னை ஏற்படுவது எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த இரு இமயங்கள் விவகாரத்தில் விரைவில் சுமூக தீர்வு ஏற்படும் என நான் நம்புகிறேன் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தனது டுவிட்டர் பக்கத்தில் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்...
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
