Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கதிர்வீச்சு திட்டத்தின் மூலம் நிலவில் கால்பதிக்க தயாராகும் மும்பை இளைஞர்!!!...

•On March 20, 2017
mumbai
Share
mumbai இந்தியாவின் முதல் தனியார் சந்திர விண்கல திட்டத்துக்கு தலைமையேற்று, நிலவில் குடியேறவிருக்கும் மனித உயிரை பாதுகாக்கும் ஆராய்ச்சிக்கு மும்பை இளைஞர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சுவாமி விவேகானந்தா சர்வதேச பள்ளியின் முன்னாள் மாணவனான சவுமில் வைத்யா, எனும் இளைஞர் டீம்இண்டஸ் எனும் தனியார் விண்கல ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து கதிர்வீச்சு தொடர்பான ஆய்வு திட்டத்தில் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இந்த திட்டத்தில் பணியாற்ற இவர் மட்டுமல்லாது, டீம்இண்டஸ் சார்பில் கடந்த மார்ச் 15ஆம் தேதி நடந்த 'லேப் டூ மூன்' எனும் போட்டி மூலம் இத்தாலியை சேர்ந்த ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது புனேவில் பணிபுரிந்துவரும் வைத்யா, பிற்காலத்தில் நிலவில் குடியேறும் மனிதர்களுக்கு எவ்வித கதிர்வீச்சு பாதிப்பும் இருக்கக் கூடாது என்பதை மையப்படுத்திய ஆய்வை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளார். சந்திர விண்கலம் மற்றும் அதன் வாழ்விடம் சுற்றி மின்னியல் கதிர்வீச்சு கவசத்தை வடிவமைக்க வேண்டும். இதற்காக தன்னுடன், கோவா பல்கலைக்கழகத்தில் பயிலும் ஐஸ்வர்யா மங்களே மற்றும் கொல்ஹாப்பூரைச் சேர்ந்த அணிக்கெட் காமத் ஆகியோரும் பணியாற்றவுள்ளதாக வைத்யா கூறியுள்ளார். இந்த ஆய்வு பணிக்காக வருகிற ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் ரூ.4,கோடி நிதி திரட்டி, 250 எடையில் 3 வாட்ஸ் மின்சக்திகளை அனுப்ப வேண்டும். நிதியுதவி கிடைத்தப்பின், அக்டோபர் மாதத்திற்குள் மாதிரி விண்கலத்தை தயார் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.டீம்இண்டஸின் இந்த சந்திர விண்கலம், வருகிற டிசம்பர் 28ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணுக்கு செல்லவிருக்கிறது. இந்த விண்கலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நிலவை தொட்டுவிட்டு திரும்பும் என்று கூறப்பட்டுள்ளது...

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.