நடிகை சுஜிபாலாவை திருமணம் செய்தது ‘உண்மை’ – மனம் தளராத நடிகர்

‘உண்மை’ என்கிற படத்தை தயாரித்து இயக்குவதோடு அதில் மூன்று வேடங்களில் நடிக்கிறார் அறிமுக நடிகரான ரவிகுமார். முதல் படத்திலேயே போலீஸ் ஆபிசராக நடிப்பதோடு, மற்ற இரண்டு வேடங்களில் திருங்கையாகவும், மனநலம் பாதிக்கப்பட்டவராகவும் நடித்திருக்கிறார். கதாநாயகனும் இயக்குனருமான ரவிகுமார்.
இந்தப்படத்தில் ரவிகுமாருக்கு ஜோடியாக நடிக்கிறார் சுஜிபாலா. இந்தப்படத்தின்போதுதான் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. ஆனால் அதன் பின்னர் தங்கள் இருவருக்கும் திருமணம் நடந்ததாக ரவிகுமார் கூறினார். ஆனால் சுஜிபாலாவோ இல்லை என்று மறுத்து ரவிகுமார் மேல் வழக்கு தொடர்ந்தார்.
அதனால் நேற்று நடைபெற்ற இந்தப்படத்தின் பிரஸ்மீட்டில் சுஜிபாலா மிஸ்ஸிங்.. இருந்தாலும் சுஜிபாலாவை நான் திருமணம் செய்தது ‘உண்மை’ தான் என தனது படத்தின் தலைப்புக்கு ஏற்றமாதிரி விடாப்படியாக, மனம் தளராமல் இருக்கிறார் ரவிகுமார். அதை ஊடகங்கள் முன்னாள் நேற்று அதிரடியாக தெரிவிக்கவும் செய்தார்..
சரி படத்தின் கதை என்னவாம்.? அரசியல்வாதிகளின் ஊழலை அம்பலப்படுத்தி ‘உண்மை’யை உலகுக்கு தெரியப்படுத்துவதுதான் படத்தின் கதையாம். முக்கிய வேடங்களில் ராதாரவி, கோட்டா சீனிவாசராவ், முன்னாள் நடிகை சார்மிளா மற்றும் ஷகீலா நடிக்கிறார்கள். ஷகீலா இந்தப்படத்தில் ட்ராகுலா வேடத்தில் நடிக்கிறார்.. ஷகீலாவை இப்படி மாத்த டைரக்டருக்கு எப்படித்தான் மனசு வந்ததோ?.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
