தீபிகாவின் தைரியத்தை பாராட்டிய ஷாருக்கான்..!

சமீபத்தில் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றின் இணையதளத்தில் தீபிகா படுகோனேவின் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதற்கு ஒரு கமெண்ட்டும் அடித்திருந்தனர். இதைப்பார்த்து டென்ஷனான தீபிகா, “ஆமாம்.. எனக்கு மார்பகங்கள் இருக்கின்றன. அதனால் கிளிவேஜூம் இருக்கின்றது.. உங்களுக்கென்ன வந்தது? ஒரு பிரபல நாளிதழ் இப்படியா சீப்பாக நடந்துகொள்வது..?” என டிவிட்டரில் சரியான டோஸ் விட்டார்.
தீபிகாவின் கோபத்தைக்கண்டு, அந்த செய்தியை உடனே தங்களது இணையதளத்தில் இருந்த நீக்கிவிட்டது அந்த நாளிதழ். பாலிவுட்டில் இப்போது இதுதான் ஹாட் டாபிக். தீபிகாவின் இந்த பதிலடிக்கு பலரிடம் இருந்தும் பாராட்டுக்கள் வந்துகொண்டிருகின்றன.
தற்போது தீபிகாவின் கருத்தை ஆமோதிக்கும் விதமாக, “தீபிகாவுக்கு அனைவரும் சப்போர்ட் பண்ணவேண்டும். இதுபோன்ற ஆபாசமான கமெண்டுகளில் பத்திரிகைகள் இறங்கும்போது அதை கண்டிக்க தவறக்கூடாது” என தீபிகாவுக்கு ஆதரவாக அவரது துணிச்சலை பாராட்டியுள்ளார் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
