கிரிக்கெட் வீரருக்கு ஜோடியானார் காவ்யா மாதவன்..!

மலையாள முன்னணி நடிகையான காவ்யா மாதவனை உங்களுக்கு தெரியும் தானே.?. தமிழில் ‘காசி’, ‘என் மனவானில்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார், காவ்யா மாதவன். இவர், தற்போது தனது கணவரைவிட்டு பிரிந்தபின் மீண்டும் மலையாள சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.
தற்போது லேட்டஸ்ட் நிலவரமாக ‘லாஸ்ட் பெல்’ என்கிற படத்தில் இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அங்கோலாவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். சுனீஷ்பாபு என்கிற புதியவர் இயக்கும் இந்தப்படத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் பற்றாக்குறையை காட்டி ஆங்காங்கே பள்ளிகளை இழுத்துமூடும் அவலத்தை சொல்லவிருக்கிறார்களாம்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
