Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தம்பியின் ஜோடி அடுத்து அண்ணனுக்கு ஜோடியாகிறார்..?

•On October 11, 2014
1898756_391235324347200_641567149_o
Share

‘மெட்ராஸ்’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தவர் கேத்தரின் தெரசா.. வடசென்னை ஏரியாவாசியாக படத்தில் அவரது முகம் ஒட்டவில்லையே தவிர, படம் பார்த்த ரசிகர்களின் மனதில் பசைபோட்டாற்போல ஒட்டிக்கொண்டார் என்பது. குறிப்பாக படத்தில் கார்த்திக்கும் அவருக்குமான காதல் காட்சிகள் எல்லாம் சிம்ப்ளி சூப்பர்ப்..

தற்போது அதர்வாவுக்கு ஜோடியாக ‘கணிதன்’ என்கிற படத்தில் நடித்துவருகிற கேத்தரின், அடுத்ததாக சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கலாம் என நம்பத்தகுந்த இடத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்த பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்தபோதே சூர்யாவுடன் பழக்கம் ஏற்பட்டிருப்பதாலும் கேத்தரின் சூர்யாவுடன் நடிக்க ரொம்பவே ஆவலாக இருக்கிறாராம்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.