விஜய் ஒன்றும் 'மாயமான்’ அல்ல..!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் 'கத்தி' படத்தை அடுத்து, சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார் என்பது நூறு சதவீதம் உறுதியான செய்திதான். சிம்புதேவனின் காமெடி ஸ்கிரிப்ட்டானது, விஜய்யின் காமெடி நடிப்புக்கு தீனிபோடும் என்பதால் உண்மையிலேயே இது ஒரு ஃபேண்டஸியான கூட்டணியாகத்தான் இருக்கும்.
தற்போது படத்திற்கு ‘மாரீசன்’ என பெயர் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகின.. ஆனால் அதில் துளிகூட உண்மையில்லை, வெறும் வதந்திதான் என்கிறது விஜய் தரப்பு.. ராமாயணத்தில் சீதையை கவர்வதற்காக ராவணனால் அனுப்பப்பட்டு லட்சுமணை திசை திருப்பிய மாயமான் உருவத்தில் வந்த அரக்கன் தான் மாரீசன். ஆக விஜய் ஒன்றும் ‘மாயமான்’ அல்ல என்பது அவரது ரசிகர்களுக்கு நிம்மதி தரும் விஷயம் தான்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
