தீபாவளி ரிலீஸ் தான்.. ஆனால் எப்போது..? குழப்பத்தில் ரசிகர்கள்..!

கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் தீபாவளி ரிலீஸ் படங்கள் எவை என்று பார்த்தால் விஜய்யின் ‘கத்தி’யும், விஷாலின் ‘பூஜை’யும் மட்டும் தான் தெரிகின்றன. அப்படின்னா ஷங்கரின் ‘ஐ’..? உலகெங்கிலும் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவேண்டும் என்கிற ஒரே காரணத்தால், ‘ஐ’ தீபாவளிக்கு ரிலீஸாகாது என்பது நூறு சதவீதம் உறுதி..
சரி.. இந்த இரண்டு படங்கள் வெளியாவதால் வேறு சின்ன பட்ஜெட் படங்கள் எதுவும் வெளியாக வாய்ப்பில்லை. இப்போது குழப்பம் என்னவென்றால் இந்த இரண்டு படங்களுமே தீபாவளி ரிலீஸ் என்றுதான் விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றனவே தவிர இன்னும் சரியான தேதியை குறிப்பிடவில்லை என்பது தான்.
பொதுவாக ரஜினி படங்களைப்போல விஜய் படங்களும் பண்டிகை நாட்களில் முன்கூட்டியே இரண்டு அல்லது மூன்று நாட்கள் முன்னதாகவே ரிலீஸ் ஆவதுதான் வழக்கம். ஆனால் இந்த முறையோ தீபாவளி புதன்கிழமை(அக்-22) வருகிறது.
அதனால் தற்போதைய தியேட்டர்கள் ரிலீஸ் வழக்கப்படி தீபாவளிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையே (அக்-17) விஜய் படம் ரிலீசாக வேண்டும். விஷால் இப்படி முன்கூட்டியே ரிலீஸ் செய்த வரலாறு எதுவும் இல்லை.. அதனால் தங்களது அபிமான நடிகர்களின் படங்களை எப்போதிருந்து கொண்டாட ஆரம்பிப்பது என்பதில் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்பட்டிருப்பது உண்மை.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
