தமிழக அரசின் இந்த 4 விதிகளை மீறினால் ஓட்டுனர் உரிமம் நிரந்தர ரத்து: அமைச்சர் அதிரடி உத்தரவு...

போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டதோடு உயர்நீதிமன்ற சாலை பாதுகாப்பு குழுவின் பரிந்துரையை ஏற்று வாகன ஓட்டிகளுக்கான ஒருசில கட்டுப்பாடு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 'வாகன' ஓட்டிகள் அனைவரும் அசல் உரிமத்தை வைத்திருக்க வேண்டும். அதை சோதனை ஆய்வின்போது அந்த அசல் உரிமத்தைக் காண்பிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள்
ஹெல்மெட் அணிய வேண்டும் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், காப்பீட்டு சான்றிதழ் இல்லாத வாகனங்கள் சிறைப்பிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாகனத்தை அதிவேகமாக ஒட்டுதல், குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுதல், வாகனத்தை ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தல், சரக்கு வாகனங்களில் அதிக பாரம் மற்றும் அதிக ஆட்களை ஏற்றுதல் ஆகிய விதிமீறல்களில் ஈடுபட்டால் ஓட்டுநர்களின் உரிமங்களை தற்காலிக அல்லது நிரந்தரமாக ரத்து செய்ய இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
