Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

அரசு பேருந்தில் திடீர் தீ விபத்து: உயிர் தப்பிய பயணிகள்...

•On June 21, 2017
vizhuppuram
Share
vizhuppuram விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று மேல்மருவத்தூர் அருகே திடிரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு இன்று காலையில் பேருந்து கிளம்பியது. மேல் மருவத்தூர் பேருந்து நிறுத்தம் வந்த போது எஞ்சினில் புகை கிளம்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் பேருந்தை ஓரமாக நிறுத்தினார். பயணிகள் உடனடியாக பேருந்தில் இருந்து இறங்கினர். பேருந்தை சற்று தள்ளி நிறுத்துவதற்கு முயற்சி செய்த போது தீ மளமளவென பிடித்தது பேருந்து எரிந்தது. இதனால் டிரைவர் உள்ளிட்ட பயணிகள் பேருந்தில் இருந்து குதித்து தப்பினர். அச்சிறுப்பாக்கத்தில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பேருந்தில் பிடித்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஓட்டுநரின் சாமர்த்தியத்தினால் பயணிகள் உயிர் தப்பினர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.