Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஜூலையில் வெளியாகும் 'மாயவன்'

•On June 21, 2017
maayavan 2
Share
maayavan 2 தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான சி.வி.குமார், 'மாயவன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வந்தது. கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருந்ததால், நீண்ட நாட்களாக அப்பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது தணிக்கையில் 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது. ஜூலையில் வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சி.வி.குமார் தயாரித்துள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் மற்றும் அபி &, அபி நிறுவனம் இணைந்து வெளியிடவுள்ளார்கள். 'மாயவன்' படத்தைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்திருக்கும் '4ஜி' படத்தை தயாரித்து வருகிறார் சி.வி.குமார். அப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.