ஜெயராம் மகனை அறிமுகம் செய்து வைக்கிறார் உலகநாயகன்..!

கமலும் ஜெயராமும் நல்ல நண்பர்கள் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். கே.எஸ்.ரவிக்குமார் டைரக்ஷனில் 2000த்தில் வெளியான ‘தெனாலி’, அதன்பின் ‘பஞ்சதந்திரம்’ என இரண்டு படங்களில் கமலுடன் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார் ஜெயராம். இப்போதுகூட ரமேஷ் அரவிந்த் இயக்கும் ‘உத்தம வில்லன்’ படத்திற்காக நான்காவது முறையாக கமலுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார் ஜெயராம். அவ்வளவுதான் இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு தெரிந்திருக்க கூடிய விஷயம்..
ஆனால் இவர்களின் நட்பு இப்போது ஆரம்பித்ததல்ல.. 1989 ஆம் வருடம் கமல் மலையாளத்தில் ‘சாணக்யன்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இதில் கமலுக்கு உதவி செய்யும் நண்பனாக முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார் ஜெயராம். இந்தப்படத்தில் தன் குடும்பத்தினரின் மரணத்துக்கு காரணமான முதலமைச்சர் திலகனை மிமிக்ரி ஆர்ட்டிஸ்டான ஜெயராமின் உதவியோடு வித்தியாசமான முறையில் பழிவாங்குவார் கமல்.
நிற்க. லேட்டஸ்ட் விஷயத்திற்கு வருவோம்.. மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்தாலும்கூட, தற்போது ஜெயராம் தனது மகனை தமிழ் திரையுலகில் தான் கதாநாயகனாக அறிமுகப்படுத்த விரும்புகிறார். ‘நடுவுடுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மூலம் ரசிகர்களை தன பக்கம் கவனிக்க வைத்த பாலாஜி தரணீதரன் அடுத்து இயக்கும் ‘ஒரு பக்க கதை’யில் ஜெயராம் மகன் காளிதாசன் தான் ஹீரோ.
ஜெயராமுடனான தனது நட்பின் அடிப்படையில் இன்று மாலை நடைபெற இருக்கும் இந்தப்படத்தின் துவக்கவிழாவில் கலந்துகொண்டு அவரது மகனை அறிமுகப்படுத்த இருக்கிறார் கமல். இதற்காக தற்போது தான் நடித்துவரும் ‘பாபநாசம்’ படத்தின் படப்பிடிப்பில் இருந்து கிளம்பி வருகிறார் கமல்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
